கல்விக்கு விவாதமும் உரையாடலும் முக்கியம் -பிரதமர் மோடி

by Admin / 30-07-2023 01:20:36am
 கல்விக்கு விவாதமும் உரையாடலும் முக்கியம் -பிரதமர் மோடி

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் அகில பாரதிய சிக்ஷா சமகத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.. கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் தலைவிதியை மாற்றக்கூடிய காரணிகளில் கல்வியின் முதன்மையை அடிக்கோடிட்டுக் காட்டினார். 21ம் நூற்றாண்டு இந்தியா நகர்ந்து கொண்டிருக்கும் இலக்குகளை அடைவதில் நமது கல்வி முறை பெரும் பங்கு வகிக்கிறது, என்றார். அகில் பாரதிய சிக்ஷா சமகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், கல்விக்கு விவாதமும் உரையாடலும் முக்கியம் என்றார்.

 

Tags :

Share via