உணவு விடுதி உரிமையாளரிடம் கை நீட்டிய மருத்துவமனை டீன் தற்காலிக பணியிடை நீக்கம். 

by Editor / 30-07-2023 10:36:38pm
உணவு விடுதி உரிமையாளரிடம் கை நீட்டிய மருத்துவமனை டீன் தற்காலிக பணியிடை நீக்கம். 

 

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவ மாணவிகள் என மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்கு நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளிலிருந்தும் சுமார் 6 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர். இவர்கள் உணவு மற்றும் சிற்றுண்டி வசதிக்காக மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு உணவு விடுதிகள் அமைக்க உரிமம் பெறுவதற்கு தலா ரூ.10 முதல் 15 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உணவு விடுதி அமைத்துள்ள மாரிச்சாமி என்பவர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திற்கு லஞ்சம் கொடுக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.மருத்துவமனையின் உணவக உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்தை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவுபிறப்பித்துள்ளார்.லஞ்சம் வாங்கியது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கைமுதல்கட்டமாக எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via