சொத்துக்காக சொந்த சகோதரியை குடும்பத்தோடு சேர்ந்து கொலை செய்த சகோதரி உள்ளிட்டவர்களுக்கு ஆயுள்தண்டனை.

by Editor / 10-08-2023 06:47:55pm
சொத்துக்காக சொந்த சகோதரியை குடும்பத்தோடு சேர்ந்து கொலை செய்த சகோதரி உள்ளிட்டவர்களுக்கு ஆயுள்தண்டனை.

தென்காசி மாவட்டம் பி கே புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீராணம் பகுதியைச் சார்ந்தவர் பேச்சியம்மாள் இவருக்கு இவருக்கு சுப்பையா தேவர் என்பவருடன் திருமணம் ஆகி குழந்தைகள் இல்லாமல்  இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சுப்பையா தேவரும் காலமாகிவிட்டார். பேச்சியம்மாள் மட்டும் தனிமையில் இருந்துள்ளார். இவருக்கு அடுத்த வீட்டில் இவரது சகோதரி கருத்தாத்தாள் குடும்பத்துடன் இருந்து உள்ளார். இந்த நிலையில் பேச்சியமானுடைய வீட்டை அபகரிக்கும் நோக்கத்தோடு கருத்தாத்தாள் குடும்பத்தினர் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில்  கருத்தாத்தாள் மற்றும் அவரது கணவர் பிச்சையா தேவர், மகன் துரை முத்து, மகள் மாரி என்ற மாரியம்மாள் ஆகியோர் பேச்சியம்மாளை அடிக்கடி வீட்டை எழுதி தரச் சொல்லி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது இதற்கு அவர் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் உயிரோடு இருந்தால் தானே வீட்டை எழுதி தர மாட்டார் இறந்துவிட்டால் வீட்டை எழுதித் தந்துதானே  தீர வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு பேச்சியம்மாளை  கருத்தாத்தாள் வீட்டிற்கு கூட்டி வந்து பேய் பிடித்ததாக கூறி தாக்கி அவர் உடம்பில் பல்வேறு பகுதிகளில் கட்டி போட்டு நெற்றியில் சூடம் ஏற்றி சித்திரவதைகளை செய்துள்ளனர் உறவினர்கள் கேட்டதற்கு அவளுக்கு (பேச்சியம்மாளுக்கு) பேய் பிடித்துள்ளதால் பேயை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பேச்சியம்மாள் ஆகஸ்ட் 2014 ஆம் ஆண்டு கருத்தாத்தாள் குடும்பத்தின் தாக்குதலால் பரிதாபமாக பலியானார். இது குறித்து வீ.கே.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு செங்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று பின்னர் தென்காசி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அங்கு விசாரணை நடைபெற்றது இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த பொழுது பேச்சியம்மாவின் சகோதரி கருத்தாத்தளின்னுடைய கணவர் பிச்சையாதேவர் இறந்துவிட்டார். இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்ற த்தில் நீதிபதி திருமதி அனுராதாவால் வழங்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட பேச்சியம்மாளின் சகோதரரி கருத்தாத்தாள் அவருடைய  மகன் துரைமுத்து மற்றும் மகள் மாரி என்ற மாரியம்மாள் ஆகியா 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் 3  நபர்களுக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம்  அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

Tags :

Share via