விவசாயிகள் வறட்சி நிவாரணம் கோரும் கோரிக்கைபோராட்டம்

by Admin / 11-08-2023 01:07:23pm
விவசாயிகள் வறட்சி நிவாரணம் கோரும் கோரிக்கைபோராட்டம்

2022 ம் ஆண்டு மழை குறைவால் 33 சதவீதத்திற்கும் கீழ் மகசூல் குறைந்த விடுபட்ட தாலுகாக்களை இணைத்து விவசாயிகள் விடுபடாமல் நிவாரணம் வழங்கிட கோரி - கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வருவாய் கோட்டத்திற்கு  உட்பட்ட கயத்தார் கோவில்பட்டி விளாத்திகுளம், எட்டையாபுரம், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் மானவாரி நிலங்களில் 1.25 ஹெக்டேர் பரப்பளவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மழை குறைவால் 33 சதவீதத்திற்கும் கீழ் மகசூல் குறைந்த உள்ளதாகவும் விடுபட்ட தாலுகாக்களை இணைத்து விவசாயிகள் விடுபடாமல் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில்   200க்கும் மேற்பட்டவர்கள் விவசாயிகள் பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வறட்சி நிவாரணம் கோரும் கோரிக்கை விண்ணப்ப மனு கொடுக்கும் போராட்டத்தையும் நடத்தினார்.

போராட்டத்தின் போது மாவட்ட நிர்வாகத்துக்கும் தமிழக அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

 

விவசாயிகள் வறட்சி நிவாரணம் கோரும் கோரிக்கைபோராட்டம்
 

Tags :

Share via