பாஜக எம்.பி.யின் பங்களா ஏலம் - பின்வாங்கிய வங்கி

by Staff / 21-08-2023 12:13:27pm
பாஜக எம்.பி.யின் பங்களா ஏலம் - பின்வாங்கிய வங்கி

பாலிவுட் நடிகர் சன்னி தியோல் வாங்கிய கடனை கட்டவில்லை என்பதால் அவரது பங்களா ரூ.56 கோடிக்கு அடுத்த மாதத்தில் ஏலத்திற்கு வருவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்.பி.யும் நடிகருமான சன்னி தியோல் 756 கோடி கடனை செலுத்தாததால் மும்பையில் உள்ள அவரது சொகுசு பங்களாவை, ஏலம் விடுவதாக வெளியிட்ட அறிவிப்பை பேங்க் ஆஃப் பரோடா திரும்பப் பெற்றது. மேலும், நேற்று நாளிதழ்களில் ஏல அறிவிப்பை வெளியிட்ட வங்கி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திரும்பப் பெறுவதாக இன்று தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via