9 மாவட்டங்களில் கனமழை சென்னை வானிலை மையம் 

by Editor / 07-09-2023 09:10:20am
 9 மாவட்டங்களில் கனமழை சென்னை வானிலை மையம் 

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது காலை 10 மணி முதல் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் குடை, ரெயின் கோர்ட் போன்றவற்றை எடுத்துச் செல்லும்படி சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Tags :  9 மாவட்டங்களில் கனமழை சென்னை வானிலை மையம் 

Share via