அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை

by Staff / 07-09-2023 02:25:48pm
அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரை பதவி நீக்கம் செய்யக்கோரி தமிழ்நாடு பாஜக சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் தலைமையிலாக குழுவினர் நேரில் சந்தித்தனர். அமைச்சர் உதயநிதி சனாதான ஒழிப்பு பற்றி பேசியபோது, அதே மேடையில் அமைச்சர் சேகர்பாபு அமர்ந்திருப்பது அவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்கும் போது எடுத்த உறுதிமொழிக்கு எதிரானது என்பதால், இருவரையும் பதவி நீக்க செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

 

Tags :

Share via