ஸ்டாலின் பிரதமர் வேட்பாளரை சுட்டிக்காட்ட பயப்படுவது ஏன்? உங்களில் யார் பிரதமர் வேட்பாளர்?என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்

by Staff / 03-09-2023 01:23:14pm
ஸ்டாலின் பிரதமர் வேட்பாளரை சுட்டிக்காட்ட பயப்படுவது ஏன்? உங்களில் யார் பிரதமர் வேட்பாளர்?என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்

பிரதமர் மோடி பயப்படுவதாக சொல்லும் மு.க.ஸ்டாலின், பிரதமர் வேட்பாளரை சுட்டிக்காட்ட பயப்படுவது ஏன்? என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக களமிறங்கி இருக்கும் இந்தியா கூட்டணி பற்றி பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது, காமெடி கூட்டமாகத் தான் பார்க்கிறேன். பிரதமர் மோடியை தோற்கடிப்பதற்காக 26 பேர் ஒன்று சேர்ந்துள்ளார்கள். மோடி தனி ஒருவராகத்தானே நிற்கிறார். அவரை தோற்கடிக்க இத்தனை பேர் உங்களுக்கு தேவைப்படுகிறது. உங்களில் யார் பிரதமர் வேட்பாளர்? ராகுலா? நிதிஷ்குமாரா? மம்தாவா? சரத்பவாரா? கெஜ்ரிவாலா? அகிலேஷா? சொல்லுங்கள். இவ்வாறு அவர் கேள்வியெழுப்பினார்.

 

Tags :

Share via