எய்ம்ஸ் மருத்துவமனையை தேடியலைந்த எம்.பி.க்கள்

by Editor / 23-09-2022 10:20:37pm
எய்ம்ஸ் மருத்துவமனையை தேடியலைந்த எம்.பி.க்கள்

பாஜகவின்  தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துமவனையின் கட்டுமானத்திற்கான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன என்று தெரிவித்தார்.அவர் கூறிய தகவல்மதுரையிலுள்ள அரசியல்கட்சியினரிடம் பேசுபொருளாகியது.

இந்நிலையில் விருதுநகர் எம்.பி.மாணிக்கம் தாகூர், மதுரை எம்.பி.வெங்கடேசன் ஆகியோர்  இன்று எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூர் பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அங்கு மருத்துவமனை அணைப்பாதற்கான எந்த விதமான பூர்வாங்க பணிகள் உள்ளிட்ட  எந்த கட்டுமான பணியும் நடக்கவில்லை. சுற்றிலும் சுவர்கள் மட்டுமே கட்டப்பட்டிருந்தது. காலியாக உள்ள அந்த இடத்தில் இருவரும் நடந்து செல்லும் புகைப்படங்களை எம்.பி.மாணிக்கம்தாகூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

 

Tags :

Share via