ரஜினிகாந்துக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ

by Staff / 19-09-2023 02:17:44pm
ரஜினிகாந்துக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ

நடிகர் ரஜினிகாந்துக்கு பிசிசிஐ கவுரவ செயலாளர் ஜெய்ஷா கோல்டன் டிக்கெட்டை வழங்கியுள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நேரில் சந்தித்த ஜெய்ஷா, ரஜனியிடம் கோல்டன் டிக்கெட்டை வழங்கினார். இதுபற்றி ட்வீட் செய்துள்ள பிசிசிஐ, 'நடிகர், மொழி மற்றும் கலாச்சாரத்தை கடந்து, மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளார். கிரிக்கெட் உலகக் கோப்பை 2023-க்கு நம் புகழ்பெற்ற விருந்தினராக அவர் இருப்பதன் மூலம் மிகப்பெரிய கிரிக்கெட் காட்சியை ஒளிரச் செய்வார்' என குறிபிட்டுள்ளது.

 

Tags :

Share via