3ஆம் கட்ட தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

by Staff / 12-04-2024 11:44:09am
3ஆம் கட்ட தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இந்நிலையில், 3ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று  தொடங்குகிறது. இந்த வேட்புமனு தாக்கல் 19ஆம் தேதி வரை பெறப்படுகிறது. மேலும், 20ஆம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெற 22ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் வருகிற மே 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.

 

Tags :

Share via