ராணுவ பள்ளிகள் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு.. மத்திய அரசு கண்டனம்

by Staff / 12-04-2024 11:41:28am
ராணுவ பள்ளிகள் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு.. மத்திய அரசு கண்டனம்

நாட்டில் உள்ள சைனிக் பள்ளிகளை தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். இதற்கு பாதுகாப்பு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “காங்கிரஸின் குற்றச்சாட்டுகள் அபத்தமானது. அவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள்,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்களைக் கொண்ட 100 பள்ளிகளை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via