ராகுல் காந்தி தமிழகம் வருகை - நெல்லை, கோவையில் பிரச்சாரம்

by Staff / 12-04-2024 11:24:45am
ராகுல் காந்தி தமிழகம் வருகை - நெல்லை, கோவையில் பிரச்சாரம்

இந்தியா கூட்டணி சார்பாக நெல்லையில் நடைபெற உள்ள பரப்புரை பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்ள உள்ள நிலையில், பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ளுமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா கூட்டணி சார்பாக இன்று (ஏப்ரல் 12) மாலை 3.00 மணியளவில் நெல்லை பெல் மைதானத்தில் நடைபெறும் மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொள்கிறார். அதேபோல, மாலை 6.00 மணியளவில் கோயம்புத்தூர் பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலினுடன் ராகுல் காந்தி இணைந்து பங்கேற்கிறார்.

 

Tags :

Share via