புல்லட் பைக்கில் பயணம் செய்த முதல்வர்

by Staff / 26-09-2023 02:03:41pm
புல்லட் பைக்கில் பயணம் செய்த முதல்வர்

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் செப்டம்பர் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று புல்லட் பைக்கில் சென்றார். 'கார் ஃப்ரீ டே' நிகழ்ச்சிக்கு ஆதரவாக பைக்கில் அவர் பயணம் செய்தார். "நானும் கர்னால் விமான நிலையத்திற்கு பைக்கில் பயணம் செய்தேன். இன்று ட்ராஃபிக்கை குறைக்க ஒரு சிறு முயற்சி செய்தேன்" என்று X(Twitter) பக்கத்தில் ஹரியானா முதல்வர் பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து கர்னாலில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் 'கார் இல்லாத நாளாக' கடைபிடிக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

 

Tags :

Share via