ஆயுத பூஜை விழாவுக்கு சிறப்பு பேருந்துஇயக்கம் முன்பதிவு கட்டணத்தைவிட கூடுதல் கட்டணங்கள் வசூல்.

by Editor / 15-10-2023 10:44:12pm
ஆயுத பூஜை விழாவுக்கு சிறப்பு பேருந்துஇயக்கம் முன்பதிவு கட்டணத்தைவிட கூடுதல் கட்டணங்கள் வசூல்.

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அக்.20, 21, 22ம் தேதிகளில் 2,265 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.இதேபோல பிற மாவட்டங்களில் உள்ள மக்கள் சொந்த ஊர் செல்ல 1,700 சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளும் வழக்கமான பயண நேர அடிப்படையில் இயக்கப்பட உள்ளது.இதே நேரத்தில் அரசு சிறப்பு பேரூந்துக்களுக்கு பல முன்பதிவு மையங்களில் பேரூந்தின் முன்பதிவு கட்டணத்தைவிட கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

Tags : ஆயுத பூஜை விழாவுக்கு சிறப்பு பேருந்துஇயக்கம் முன்பதிவு கட்டணத்தைவிட கூடுதல் கட்டணங்கள் வசூல்.

Share via