எல்லை பிரச்னையில் .அமித்ஷா  நாட்டை தோல்வியுறச் செய்து விட்டார் :ராகுல் காந்தி

by Editor / 27-07-2021 04:07:16pm
 எல்லை பிரச்னையில் .அமித்ஷா  நாட்டை தோல்வியுறச் செய்து விட்டார் :ராகுல் காந்தி

இந்தியா தற்போது மோசமான விளைவுகளை அறுவடை செய்து வருகின்றது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமரிசித்துள்ளார்.


அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனை, மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதில் அசாம் போலீசார் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரு மாநில முதல்வர்களுடன் தொலைபேசியில் பேசி எல்லைப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காணுமாறு அறிவுறுத்தி உள்ளார்.


இந்த நிலையில், இது குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திதனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், மிசோரம்- அசாம் இடையிலான எல்லை பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த தேசத்தின் உள்துறை அமைச்சர் வெறுப்பையும் அவநம்பிக்கையும் மக்களின் வாழ்க்கையில் விதைத்து, நாட்டை மீண்டும் தோல்வியுறச் செய்து விட்டார். இந்தியா தற்போது மோசமான விளைவுகளை அறுவடை செய்து வருகின்றது என்று விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via