டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்தது

by Staff / 28-10-2023 02:01:02pm
டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்தது

டெல்லியின் பல பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீபத்திய அறிக்கையில், சனிக்கிழமை அன்று டெல்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு 286. இந்த அளவு காற்று மோசமான வகையின் கீழ் வருகிறது. நாளுக்கு நாள் டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது. இது கடந்த வெள்ளிக்கிழமை அக்டோபர் 27 ஆம் தேதி 261 ஆகப் பதிவானது. மேலும் டெல்லியில் காலையில் வழக்கத்தை விட குளிர் அதிகமாக உள்ளது.

 

Tags :

Share via