காங்கிரஸ் கட்சியில் இணையும் முன்னாள் டிஜிபி

by Staff / 01-11-2023 02:22:39pm
காங்கிரஸ் கட்சியில் இணையும் முன்னாள் டிஜிபி

தமிழக தீயணைப்புத் துறை முன்னாள் டிஜிபி பி.கே.ரவி காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழக முன்னாள் டிஜிபி பி.கே.ரவி இன்னும் சற்று நேரத்தில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார். தமிழ்நாடு தீயணைப்புத்துறை டிஜிபியாக இருந்த பி.கே.ரவி, அண்மையில் விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் அரசியலில் இணைய உள்ளார். இவர் மின்சாரத்துறை, விஜிலென்ஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். வரும் மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via