5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.

by Editor / 09-11-2023 08:37:03am
5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழை பெய்து வருவதால், மதுரை, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் மழையில் வெளியே செல்லாமல், வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி ஆகிய 4 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.

Share via

More stories

Logo