செந்தில் பாலாஜிக்கு பித்தபை கல் : தீவிர சிகிச்சை

by Staff / 17-11-2023 12:30:01pm
செந்தில் பாலாஜிக்கு பித்தபை கல் : தீவிர சிகிச்சை

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நல குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதில் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பித்தப்பை கல்லை கரைப்பதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே, அவருக்கு உயர் ரத்த அழுத்தம், வயிற்றுப்புண் மற்றும் குடல் புண் காரணமாக சிறப்பு குழுவினர் காலையிலேயே சிகிச்சை அளித்து வந்த நிலையில், பித்தப்பை கல்லுக்கும் சேர்த்து சிகிச்சையை தொடங்கியுள்ளனர்.
 

 

Tags :

Share via