நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகர்

by Staff / 19-11-2023 12:22:42pm
நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகர்

பிரபல மலையாள திரைப்பட-சீரியல் நடிகர் வினோத் தாமஸ், பாம்பாடி அருகே உள்ள கோட்டயம் ட்ரீம்லேண்ட் ஹோட்டலில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். காருக்குள் இறந்து கிடந்த அவரை போலீசார் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், டாக்டர்கள் அவரை பரிசோதித்து, இறந்துவிட்டதாக அறிவித்தனர். உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். தாமஸ், 'அய்யப்பனும் கோஷியும்', 'நாத்தோலி ஒரு செரிய மீனல்ல', 'ஒரு முறை வந்த பாதை', 'ஹேப்பி வெட்டிங்', 'குரி' மற்றும் 'ஜூன்' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது இந்த மர்ம மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via