எடப்பாடி பழனிசாமி கூட பிரதமர் ஆகலாம் அதிமுக எம்.பி தம்பிதுரை

by Staff / 17-01-2024 04:06:08pm
எடப்பாடி பழனிசாமி கூட பிரதமர் ஆகலாம்   அதிமுக எம்.பி தம்பிதுரை

தற்போது அதிமுக கட்சியானது இரண்டு அணிகளாக பிரிந்து கிடக்கிறது. ஒரு புறம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் மற்றொருபுறம் அதிமுகவின் பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஒரு அணி என இரண்டாக பிளவுற்று உள்ளது. இந்நிலையில் அதிமுக எம்.பி தம்பிதுரை கருது ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் நாளை எடப்பாடி பழனிசாமி கூட இந்திய பிரதமர் ஆகலாம் என கூறியுள்ளார். மேலும் எங்களை பொறுத்தவரை உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை ஆளுமைமிக்க தலைவராகத்தான் பார்த்துக்கொண்டிருந்தர் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via