திருப்பதி முழுவதும் 3 ஆயிரம் போலீசார் குவிப்பு.

by Editor / 26-11-2023 09:37:46am
திருப்பதி முழுவதும் 3 ஆயிரம் போலீசார் குவிப்பு.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தேர்தல் பரப்புரையை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று மாலை 6.50 மணிக்கு திருப்பதி வருகிறார். நாளை காலை 8 மணியளவில் திருப்பதி ஏழுமலையானை பிரதமர் மோடி தரிசனம் செய்ய உள்ளார். அதன்பின் காலை 10.20 மணிக்கு விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி மீண்டும் விமானம் மூலம் டெல்லி செல்ல இருக்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருப்பதி முழுவதும் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : திருப்பதி முழுவதும் 3 ஆயிரம் போலீசார் குவிப்பு.

Share via