காலணி உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்த முதல்வர்

by Staff / 28-11-2023 01:13:30pm
காலணி உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்த முதல்வர்

பெரம்பலூர் ஏறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைந்துள்ள புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலையை சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்திலிருந்து, காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பெரம்பலூர் பீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் ஜேஆர் ஒன் தொழிற்சாலைவை முதலமைச்சர் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக தமிழ்நாடு உள்ளது. முதற்கட்டமாக ரூ.400 கோடி முதலீட்டில் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 2028ஆம் ஆண்டிற்குள் ரூ.2,440 கோடி முதலீட்டில் 29,500 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படவுள்ளது. இதன்மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.

 

Tags :

Share via