கடும் பனிமூட்டம்.. 30 வாகனங்கள் மோதி விபத்து

by Staff / 29-11-2023 11:55:48am
கடும் பனிமூட்டம்.. 30 வாகனங்கள் மோதி விபத்து

அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக சாலை விபத்து ஏற்பட்டது. அங்குள்ள இன்டர்ஸ்டேட் 86 இல் சுமார் 30 வாகனங்கள் மோதிக்கொண்டதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. போகாடெல் விமான நிலைய பகுதியில் திங்கட்கிழமை காலை இந்த விபத்து நடந்துள்ளது. ஒருவர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வாகனங்களை ஓரமாக மாற்றி நிறுத்தி போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர ஏழு மணி நேரம் ஆனது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via