திமுகஇளைஞர் அணி மாநில மாநாடு அழைப்பிதழ் முதல்வரிடம் வழங்கல்

by Staff / 01-12-2023 12:55:23pm
திமுகஇளைஞர் அணி மாநில மாநாடு அழைப்பிதழ் முதல்வரிடம் வழங்கல்

திமுக இளைஞர் அணி மாநில மாநாடு அழைப்பிதழ் முதல்வரிடம் வழங்கியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது x தளத்தில், Post See new posts Conversation Udhay @Udhaystalin தி. மு. கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு - மாநில உரிமை மீட்பு முழக்கமாக சேலத்தில் எதிர்வரும் 17-ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் - இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கிற வகையில் நடைபெறவுள்ள, இந்த பெருமைக்குரிய மாநாட்டுக்கான அழைப்பிதழை கழகத்தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கழக பொதுச் செயலாளர் துரைமுருகனிடம் இன்று வழங்கி வாழ்த்து பெற்றோம். திமுக யூத்விங் மாநில மாநாட்டின் வெற்றிச் செய்தி - எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் வகையில் செயலாற்றுவோம். பாசிச கூட்டத்தின் கூடாரத்தை இழுத்து மூடி - மாநில உரிமை மீட்போம் எனப் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via