கள்ளச் சந்தையில் சீன லைட்டர்கள் அதிகளவில் விற்கப்படுவதால் தீப்பெட்டி தொழில் பாதிப்பு

by Admin / 09-10-2023 11:14:27pm
 கள்ளச் சந்தையில் சீன லைட்டர்கள் அதிகளவில் விற்கப்படுவதால் தீப்பெட்டி தொழில் பாதிப்பு

சீன லைட்டார்களுக்கு மத்திய அரசு தடை விதித்த போதிலும்  கள்ளச் சந்தையில் சீன லைட்டர்கள் அதிகளவில் விற்கப்படுவதால் தீப்பெட்டி தொழில் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளதாக கோவில்பட்டியில் மாநில தலைவர் பரமசிவன் பேட்டி.-;.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் இணைந்து மின் பயன்பாட்டு சிக்கனம் குறித்த விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தொழில் மைய மேலாளர் சொர்ணலதா தலைமையில் நடைபெற்றது.. கூட்டத்தில் மின் பயன்பாடு சிக்கனம் குறித்தும், தற்போது தீப்பெட்டி தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனை குறித்தும், தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது..

இக்கூட்டத்தில் நேஷனல் சிறு குறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் மாநிலத் தலைவர் பரமசிவன், செயலாளர் சேதுரத்தினம்,

உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின்னர்  செய்தியாளர்களிடம்  மாநில தலைவர் பரமசிவன் கூறுகையில் :பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும்தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும்.

மேலும் மின் கட்டண உயர்வு மிகவும் சுமையாக உள்ளது தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் எப்போதும் அரசை நம்பி உள்ளவர்கள் எங்களுடைய கோரிக்கைகளை முறையாக ஏற்பார்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருக்கிறோம்...

மின்கட்டண  உயர்வை  தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும், மத்திய அரசு 20 ரூபாய்க்கு குறைந்த விலையிலான லைட்டர்களை தடை செய்ய ஆணை பிறப்பித்தாலும் கள்ளச் சந்தையில் சீன லைட்டர்கள் முன்பை விட இப்போது  அதிக அளவில் விற்கப்படுவதால் தீப்பெட்டி தொழில் மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது. ஆகவே மத்திய மாநில அரசுகள் இதற்கு உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர்..

 

 

Tags :

Share via