நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவோம் - கார்கே

by Staff / 03-12-2023 05:27:24pm
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவோம் - கார்கே

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், தெலங்கானா மக்களின் தீர்ப்புக்கு நன்றி. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் வாக்காளர்களுக்கு எனது நன்றி. இந்த மூன்று மாநில தேர்தல்களிலும் எங்களது செயல்பாடு ஏமாற்றமளிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த தற்காலிக பின்னடைவுகளை கடந்து, வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்தியா கூட்டணி கட்சிகளுடன் இணைந்து முழுமையாக தயாராவோம் என்று கூறினார்.

 

Tags :

Share via