மத்திய பிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

by Admin / 10-12-2023 02:06:37pm
 மத்திய பிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

 மத்திய பிரதேச மாநில பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது...இந்தக் கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில்.பா.ஜ.க வெற்றி பெற்று ஒரு வார காலமாகிவிட்டநிலையில்  புதிய முதல்வர் யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் மேலிடம் திணறி வருகிறது.. பாஜகவின் மத்திய பிரதேச முகமான நீண்டகால முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தம்மைத்தான் மேலிடம் தேர்ந்தெடுக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்.

இன்னொரு பக்கம் நரேந்திர சிங் தோமர்,, பிரகலாத் படேல்,, கைலாஷ் விஜயவர்ஜியா உள்ளிட்டோர் முதல்வர் பதவியை கைப்பற்றதீவிரமாக உள்ளார். இவர்களுடன் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவும் இருக்கிறார்., சம்பல் பிராந்தியத்தில் மொத்தம் உள்ள 34 தொகுதிகளில் 18-ல் வெற்றி பெற காரணமாக இருந்தவர் ஜோதிராதித்யா சிந்தியாஎன்பது குறிப்பிடத்தக்கது..

 

Tags :

Share via