டைனோசர் முட்டைகளை வழிப்பட்ட கிராமத்தினர்

by Staff / 22-12-2023 11:46:16am
டைனோசர் முட்டைகளை வழிப்பட்ட கிராமத்தினர்

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள நர்மதா பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பாட்லியா கிராமத்தில், மக்கள் பல ஆண்டுகளாக அங்கிருந்த உருண்டையான கற்களை வழிப்பட்டு வந்தனர். தற்போது அந்த உருண்டை கற்களை டைனோசர் முட்டைகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த பகுதியில் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் நடமாடியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது தெரியாமல் உருண்டை கற்களை வழிப்பட்டு வந்தது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியதாக அப்பகுதி மக்கள் கூறினர். தொடர்ந்து அந்த டைனோசர் முட்டைகளை ஆராச்சியாளர்கள் எடுத்து சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via