வருமான வரி படிவங்கள் தாக்கல் செய்ய வரும் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு...

by Admin / 04-08-2021 03:00:55pm
வருமான வரி படிவங்கள் தாக்கல் செய்ய வரும் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு...




வருமான வரி படிவங்கள் தாக்கல் செய்ய வரும் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
வருமான வரி கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான புதிய வலைதளம் ஜூன் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வருமான வரி தாக்கலை எளிமைப்படுத்தும் வகையில், இந்த புதிய இணையதளம் நிறுவப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருமான வரித்துறையில், ஆன்லைன் மூலம் வரி செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காலாண்டு அறிக்கை படிவம் 15 சிசி மற்றும் 2020-2021-ம் நிதியாண்டுக்கான சமநிலை வரி அறிக்கை படிவம் எண்-1 ஆகியவை வரும் 31 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து வழங்க கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.

2020-2021 ஆம் ஆண்டுக்கான முதலீட்டு நிதியால் செலுத்தப்பட்ட அல்லது வரவு வைக்கப்படும் வருமான அறிக்கை படிவம் எண்-64 டி மற்றும் 64-சி படிவம் ஆகியவற்றை பூர்த்தி செய்து வழங்க செப்டம்பர் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 இதுதொடர்பான கூடுதல் விவரங்கள், http://www.incometaxindia.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை ஆணையர் சுரபி அலுவாலியா தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via