5 கிலோமீட்டர் தொலைவை  53 நிமிடங்களில் ஓடிக் கடந்த ரோபோ

by Editor / 31-07-2021 05:41:32pm
5 கிலோமீட்டர் தொலைவை  53 நிமிடங்களில் ஓடிக் கடந்த ரோபோ



அமெரிக்காவில் தானாகவே ஓடக்கூடிய ரோபோ, ஐந்து கிலோமீட்டர் தொலைவை வெற்றிகரமாக ஓடிக்கடந்தது.
கேஸி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவை, ஆரிகான் மாநில பல்கலைக்கழகம், ரோபாட்டிக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. நிமிர்ந்தநிலையில், ஓடக்கூடிய வடிவிலான இந்த கேஸி ரோபோ, ஒருமுறை சார்ஜ் செய்தநிலையிலேயே, 5 கிலோமீட்டர் தொலைவை 53 நிமிடங்களில் கடந்தது. ஓட்டத்தின்போது கம்ப்யூட்டர் அதிக வெப்பமானதாலும், வளைவுகளில் அதிக வேகத்துடன் திரும்பியதாலும் 2 முறை கீழே விழுந்தது.


திட்டமிட்ட தொலைவை கேஸி ரோபோ கடந்தது. பை பெடல் எனப்படும் இருகால்களில் இயங்கும் கேஸி போன்ற ரோபோக்கள், எதிர்க்காலத்தில் பொருட்களை டெலிவரி செய்யவும், வீடுகளில் உள்ளவர்களுக்கு உதவும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via