தூத்துக்குடிக்கு இன்று கனமழை அறிவிப்பு

by Staff / 06-01-2024 12:50:31pm
தூத்துக்குடிக்கு இன்று கனமழை அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த பெருமழை காரணமாக வெள்ளத்தில் தத்தளித்த அம்மாவட்டம் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை பெய்ய இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via