போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றுக ஜி.கே.வாசன்

by Staff / 06-01-2024 01:08:43pm
போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றுக  ஜி.கே.வாசன்

போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என தமாகா தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாடு அரசும், போக்குவரத்து நிர்வாகமும் பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருந்திடும் வகையில், போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo