துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்

by Staff / 06-01-2024 02:32:50pm
துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்

அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவி உயர்வு பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஜனவரி 21ஆம் தேதி சேலத்தில் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கு பிறகு அவருக்கு பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அதற்கான பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் வகையில், இந்த பொறுப்புக்கு அவர் வரவுள்ளார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் தீவிர பிரசாரம் செய்து தமிழக அரசியலில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.

 

Tags :

Share via