சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி
நடிகரும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி.யுமான சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்து கொள்ளவதற்காக பிரதமர் மோடி மீண்டும் திருச்சூர் வருகை தரவுள்ளார். ஜனவரி 17ஆம் தேதி குருவாயூர் கோவிலில் நடக்கும் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் பிரதமர் பங்கேற்பார். இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. முன்னதாக, இந்த விழாவிற்கு பிரதமரை அழைப்பதற்காக சுரேஷ் கோபி தனது மகள் மற்றும் மனைவியுடன் டெல்லிக்கு சென்றிருந்தார். முன்னதாக கடந்த வாரம் பிரதமர் மோடி, தமிழகத்தின் திருச்சிக்கும், கேரளாவின் திருச்சூருக்கும் வருகை தந்திருந்தார்.
Tags :