அமித்ஷா உடன் தமிழக எம்.பி.க்கள் குழு சந்திப்பு

by Staff / 13-01-2024 04:30:34pm
அமித்ஷா உடன் தமிழக எம்.பி.க்கள் குழு சந்திப்பு

திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக எ.ம்.பி.க்கள் குழு மத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பில் தமிழகத்தில் சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் பயல் மற்றும் தென் தமிழகத்தில் ஏற்பட்ட வெல்ல பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக தமிழக அரசு கோரிய சுமார் ரூ.37,907 கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் வைகோ, சுப்பராயன், ஜெயக்குமார், நடராஜன், நவாஸ்கனி, சின்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Tags :

Share via