இன்று திருவள்ளுவர் தினம்- பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பதிவு

by Admin / 16-01-2024 11:29:10am
இன்று திருவள்ளுவர் தினம்- பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பதிவு

இன்று திருவள்ளுவர் தினம், பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய சமூக வலைத்தள பக்கமான எக்ஸில் திருக்குறள் பற்றியும் திருவள்ளுவர் பற்றியும் தமிழில் பதிவிட்டுள்ளார்.. பிரதமர் நரேந்திர மோடி எப்பொழுது வெளிநாடு சென்றாலும் அல்லது இந்தியாவிலேயே முக்கியமான பொதுக்கூட்டங்களிலும் திருக்குறளையும் திருவள்ளுவரையும் புகழ்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இன்று அவர் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தம் பதிவில்,.தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம்  வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது.  காலத்தால் அழியாத அவரது போதனைகள்   நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிக்கிறது, நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குகிறது. அவர் எடுத்துரைத்த    அனைவருக்குமான விழுமியங்களைத் தழுவுவதன் மூலம் அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் நமது உறுதிப்பாட்டை நாம்  வலியுறுத்துவோம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்..

இன்று திருவள்ளுவர் தினம்- பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பதிவு
 

Tags :

Share via

More stories

Logo