சர்ச்சையான நேரத்தில் குடியரசு தின வாழ்த்து தெரிவித்த கனடா

by Staff / 26-01-2024 02:52:11pm
சர்ச்சையான நேரத்தில் குடியரசு தின வாழ்த்து தெரிவித்த கனடா

கனடா பிரதமர் ஜஸ்டிஸ் ட்ரூடோ இந்தியாவை கையாளும் விதத்தால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு 'குடியரசு தின' வாழ்த்துகளை கனடா தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள கனேடிய உயர் ஸ்தானிகர் அலுவலகம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் 'இந்தியாவுக்கு குடியரசு தின வாழ்த்துகள்' என்ற செய்தியை வெளியிட்டது. இதற்கிடையில், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் குடியரசு தின வாழ்த்து செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளது‌‌.

 

Tags :

Share via