கேரளாவில் போக்சோ வழக்கில் பெண்ணுக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை

by Editor / 01-02-2024 10:28:01am
கேரளாவில் போக்சோ வழக்கில் பெண்ணுக்கு  கடுங்காவல் சிறைத்தண்டனை

சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதற்காக 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.40,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் வீரணகாவு கிராமத்தைச் சேர்ந்த சந்தியா (31) என்பவருக்கு எதிராக கட்டக்கடை போக்சோ விரைவு நீதிமன்ற நீதிபதி ரமேஷ் குமார் தீர்ப்பை வழங்கினார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 7 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பான சம்பவம் 2016ஆம் ஆண்டு நடந்தது. நான்கு நாட்களுக்கு முன்பு, இதேபோன்ற  தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்தியாக்கு மற்றொரு போக்சோ வழக்கில் தொடர்புடையதற்காக வழக்கில்  13 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.59,000 அபராதமும் விதித்து அதே நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

 

Tags : கேரளாவில் போக்சோ வழக்கில் பெண்ணுக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை

Share via