நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து.

by Editor / 07-02-2024 08:55:01am
நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து.

 ஸ்பெயின் நாட்டில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்பெயின் பயணம் சாதனை பயணமாக அமைந்தது. தமிழ்நாட்டுக்கு பல்வேறு முதலீடுகளை ஈர்த்து திரும்பி இருக்கிறேன் என்றார். விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மக்களுக்கு தொண்டாற்ற யார் அரசியலுக்கு வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன் என அவர் தெரிவித்தார்.

 

Tags : நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து.

Share via