வானிலையை துல்லியமாக கணிக்க புது செயற்கைகோள்.

by Editor / 09-02-2024 08:25:50am
வானிலையை துல்லியமாக கணிக்க புது செயற்கைகோள்.

உலகின் பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலத்தை இதுவரை இல்லாத வகையில் விரிவாக ஆய்வு செய்வதற்காக ''பேஸ்'' என்ற புதிய காலநிலை செயற்கைக்கோளை நாசா  விண்ணில் செலுத்தியது. அமெரிக்காவின் கேப் கனவெரலில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் கடற்பகுதி மற்றும் வளிமண்டலத்தை சுமார் 3 ஆண்டுகள் ஆய்வு செய்யும். இந்த ஆய்வுகளின் மூலம் வானிலையை துல்லியமாக கணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

 

Tags : வானிலையை துல்லியமாக கணிக்க

Share via