பரமத்திவேலூரில் பாரம்பரியமாக நடைபெறும் மகாபாரத தெருக்கூத்து நாடகம்

by Admin / 03-08-2021 05:43:27pm
பரமத்திவேலூரில் பாரம்பரியமாக நடைபெறும் மகாபாரத தெருக்கூத்து நாடகம்



நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் ஆண்டுதோறும் ஆடிமாதம் பஞ்சபாண்டவர் கதையான மகாபாரதக் கதை நாடகம் நடைபெறுவது வழக்கம்.

மகாபராதத்தில் ஆடி மாதம் 1-ந் தேதி பாரத் போர் தொடங்கி 18-ந் தேதி நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. இதை உணர்த்தும் விதமாக நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் ஆண்டுதோறும் ஆடிமாதம் பஞ்சபாண்டவர் கதையான மகாபாரதக் கதை நாடகம் நடைபெறுவது வழக்கம். அங்குள்ள மாரியம்மன் கோவில் முன்பாக தெருக்கூத்து கலைஞர்கள் இந்த நாடகத்தை நடத்துவார்கள்.

 47வது ஆண்டாக இந்த ஆடி மாதம் முதல் தேதியிலிருந்து ஆடிப்பெருக்கு நாளான இன்று வரை மகாபாரதக்கதை நாடகம் நடைபெற்றது. இன்று துரியோதனனை வீமன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக 100 அடியில் துரியோதனன்சிலை மண்ணினால் செய்யப்பட் டது.

தீமைகளின் மொத்த உருவமாக துரியோதனனை சித்தரித்து வீமன் அவனை தொடையில் அடித்து வீழ்த்துவதும், பின்னர் பாஞ்சாலி அவனது ரத்தத்தை எடுத்து தலையில் தடவி கூந்தலை முடிந்து பாஞ்சாலி சபதத்தை முடிப்பதும் போன்ற தத்ரூபமான காட்சிகள் நிகழ்த்தப்பட்டன.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மழை பெய்து விவசாயம் செழிப்படையவும், தர்மம் வென்று அதர்மம் தோற்கும் என்பதனை உணர்த்தவும் இந்த மகாபாரத கதை நாடக காட்சி நடக்கிறது. ஆண்டாண்டு காலமாக எங்கள் பகுதியில் தெருக்கூத்து நடத்தி வருகிறோம் என்றனர்.

 

Tags :

Share via