வரலாற்றில் இன்று 03/03/2022-வியாழன்

by Editor / 03-03-2022 07:31:59am
வரலாற்றில் இன்று 03/03/2022-வியாழன்

724 : ஜப்பான் பேரரசி ஜென்ஷா முடி துறந்தார். ஷாமு புதிய பேரரசராகப் பதவியேற்றார்.

1284 : வேல்ஸ் இங்கிலாந்துடன் இணைக்கப்பட்டது.

1575 : இந்தியாவின் முகலாயப் பேரரசர் அக்பர் வங்காளப் படைகளைத் தோற்கடித்தார்.

1845 : புளோரிடா அமெரிக்காவின் 27வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

1857 : இரண்டாம் அபினிப் போர் :- பிரான்சும் பிரிட்டனும் சீனா மீது போரை அறிவித்தன.

1861 : ரஷ்யாவில் கொத்தடிமைத் தனத்தை முடிவுக்கு கொண்டு வந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

1873 : அமெரிக்காவில் அஞ்சல் மூலம் ஆபாசமான அல்லது கவர்ச்சியான நூல்களை அனுப்புவது தடை செய்யப்பட்டது.

1878 : துருக்கியிடமிருந்து பல்கேரியா விடுதலை அடைந்தது.

1904 : எடிசனின் போனோகிராமைக் கொண்டு முதன்முதலாக அரசியல் ஆவணம் ஒன்றின் ஒலிப்பதிவை இரண்டாம் வில்லியம் உருவாக்கினார்.

1905 : ரஷ்யப் பேரரசர் நிகோலஸ் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபையை ஏற்படுத்த இணங்கினார்.

1913 : அமெரிக்காவில் பெண்களுக்கான வாக்குரிமை கோரி வாஷிங்டன் நகரில் பெண்களின் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.

1918 : துருக்கியில் சாம்சன் எனுமிடத்தில் ஆர்மீனியர்கள் அனைவரையும் முஸ்லிம்கள் படுகொலை செய்துவிட்டனர்.

1919 : பெர்லினில் பெரும் கலவரம் ஏற்பட்டு 1,500 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

1923 : நியூயார்க்கில் இருந்து டைம் முதல் இதழ் வெளியானது.

1933 : ஜப்பானில் ஹொன்சூ என்ற இடத்தில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதில் 3,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1938 : சவுதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.

1939 : மும்பையில் காந்திஜி ஆங்கிலேயருக்கு எதிராக உண்ணாவிரதம் ஆரம்பித்தார்.

1942 : இரண்டாம் உலகப்போர் :- மேற்கு ஆஸ்திரேலியாவில் 
புரூம் என்ற நகரில் ஜப்பானின் 10 போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

1943 : இரண்டாம் உலகப்போர் :- விமான குண்டு தாக்குதலின் போது சுரங்க ரயில் நிலையத்தில் ஒதுங்கிய 173 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

1945 : இரண்டாம் உலகப் போர் :- பிரிட்டன் வான்படையினர் நெதர்லாந்தின் டென்ஹாக் நகர்மீது தவறுதலாக குண்டுகளை வீசியதில் 511 பேர் உயிரிழந்தனர்.

1966 : பிரிட்டனின் போயிங் 707 பயணிகள் விமானம்
ஃபியூஜி மலையில் விபத்துக்குள்ளானதில் 124 பேர் உயிரிழந்தனர்.

1969 : நாசாவின் அப்பல்லோ - 9 விண்ணில் ஏவப்பட்டது.

1974 : பாரிஸ் அருகே துருக்கி விமானம் ஒன்று விழுந்ததில் அதில் பயணம் செய்த 346 பேரும் உயிரிழந்தனர்.

1985 : சிலியில் வால்பராசோ என்ற பகுதியில் 8.3 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 177 பேர் உயிரிழந்தனர்.

1991 : சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்ல ஆதரவாக 
லாட்வியாவின் 74 சதவீத மக்களும் எஸ்டோனியாவின் 83 சதவீத மக்களும் வாக்களித்தனர்.

2005 : ஸ்டீவ் போசெட் என்ற அமெரிக்கர் எரிபொருள் மீண்டும் நிரப்பாமல் தனியே விமானம் ஒன்றில் உலகைச் சுற்றி வலம் வந்து சாதனை படைத்தார்.

2013 : கராச்சியில் ஷியா முஸ்லிம்கள் வாழும் பகுதியில் குண்டு வெடித்ததில் 45 பேர் உயிரிழந்தனர்.
180 பேர் காயமடைந்தனர்.

 

Tags :

Share via