திமுக வேட்பாளராக தேர்தலில் களமிறங்கும் கரு.பழனியப்பன்

by Staff / 14-02-2024 11:42:20am
திமுக வேட்பாளராக தேர்தலில் களமிறங்கும் கரு.பழனியப்பன்

திமுகவில் இணைந்து பிரபல நடிகரும், இயக்குநருமான கரு.பழனியப்பன் மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப.சிதம்பரத்தின் சொந்த மாவட்டமான சிவகங்கை தொகுதியை இந்த முறை திமுக ஒதுக்க கோரிக்கை வலுத்துள்ளது. இதனால், அங்கு தனது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ள திமுக, உதயநிதிக்கு நெருக்கமான வளையத்தில் உள்ள கரு.பழனியப்பனை வேட்பாளராக்க முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via