முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5 28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள்..

by Editor / 20-02-2024 08:50:47am
 முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5 28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள்..

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட, தங்கம், வெள்ளி, வைடூரிய நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராகி பெற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில், 28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள், 11,344 விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், 740 விலை உயர்ந்த செருப்புகள் என மொத்தமாக 5 ட்ரங் பெட்டிகளில் உள்ள ஆபரணங்கள் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு அரசின் கருவூலத்தில் வைக்கப்படவுள்ளன.மார்ச் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தமிழக உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளுமாறு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு சொத்து வழக்கில் குற்றவாளிகளின் தண்டனை காலம் முடிந்த நிலையில் ஏலம் விடுமாறு தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு வழக்கு கட்டணமாக ரூ.5 கோடியை கர்நாடகாவுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு

 

Tags : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5 ட்ரங் பெட்டிகளில் உள்ள ஆபரணங்கள்

Share via