தமிழக சட்டப்பேரவைக்கு 3 நாள்கள் விடுமுறை

by Editor / 06-09-2021 05:23:56pm
தமிழக சட்டப்பேரவைக்கு 3 நாள்கள் விடுமுறை

10,11,12 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழகச் சட்டப்பேரவை கூட்டத்தொடா் ஆகஸ்ட் 13-இல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதோடு தொடங்கியது. அதைத்தொடர்ந்து பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் கடந்த 23-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கூட்டத்தொடா் செப்டம்பா் 13-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் வரும் 10,11,12 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.அதேசமயம் செப். 8ஆம் தேதி மட்டும் காலை 10 மணி மற்றும் மாலை 5 மணி என இரு வேளைகளிலும் பேரவை நடக்கிறது. மேலும் திட்டமிட்டப்படி செப்.13 ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான செப்.13ஆம் தேதி கேள்வி நேரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via