தற்கொலை செய்து கொண்ட காவலர் உடலை வாங்க மறுத்து திரண்டதால் மருத்துவமனையில் பரபரப்பு.

by Editor / 20-02-2024 12:03:35am
தற்கொலை செய்து கொண்ட காவலர்  உடலை வாங்க மறுத்து திரண்டதால்   மருத்துவமனையில் பரபரப்பு.

தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி பகுதியை சேர்ந்த காவலர் மூர்த்தி இவர் செங்கோட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களாக மூர்த்தி பணிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் 18 ஆம் தேதி மாலை வீட்டில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து தகவல் அறிந்து விரைந்த குற்றாலம் காவல்துறையினர் உடலைக்கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மூர்த்தி இறந்ததற்கு பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தமே  காரணம் தினமும் மிக அழுத்தத்தோடு அவர் இருந்ததாகவும் கூறப்படுகிறது அவர்கள் நண்பரிடமும் தன்னை ஏராளமானோர் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன மூர்த்தி எழுதியதாக கூறப்படும் ஆறு பக்க வாக்குமூலம் ஒன்றையும் அவர்கள் குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர் அந்த வாக்குமூலத்தில் 3 காவல்துறை காவலர்களின்  பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

 மேலும் அவர்கள் ஏராளமான நெருக்கடிகளை கொடுத்ததாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இறந்த காவலர் மூர்த்தியின் உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடலை வாங்க மறுத்து திரண்டனர் தொடர்ந்து காவல்துறையுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் இறந்த காவலரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து கலைந்து சென்றனர் இதன் காரணமாக தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை உடற்கூறு பரிசோதனை கட்டிடத்தில் மூர்த்தியின் உடல் வைக்கப்பட்டுள்ளது வைக்கப்பட்டுள்ளது மேலும் அங்கு பிரீசர் வசதி இல்லாததின் காரணமாக உடலை இடமாற்றம் செய்ய வேண்டிய சூழலுக்கு மருத்துவமனை நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது.

 இன்று இரவுக்குள் உடலை அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கான பேச்சுவார்த்தையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் காரணமாக ஆயிரப்பேரி கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பல்வேறு கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர் இதன் காரணமாக பரபரப்பு நிலவுகிறது. 

காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது ஏற்கனவே மூர்த்திக்கு திருமணம் செய்வதற்காக ஒரு பெண்ணை பார்த்ததாகவும் அந்த பெண் மூர்த்தியை பிடிக்கவில்லை என்று கூறியதாகவும் அதன் காரணமாக அன்றிலிருந்து மூர்த்தி மணமடைந்து காணப்பட்டதாகவும், இதன் காரணமாக ஒரு முறை தற்கொலைக்கு முயன்றதாகவும், அந்த மன அழுத்தத்தில் இருந்து இன்னும் அவர் விடுபடாமல் இருந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்றும் தகவல்களை தெரிவிக்கின்றனர்.. ஆனால் அவரது குடும்பத்தினர் போலீசார் தான் மூர்த்தி மரணத்திற்கு காரணம் என்றும் நடவடிக்கை வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

 

Tags : தற்கொலை செய்து கொண்ட காவலர்

Share via