வேகத்தடையில் செல்லும் போது இறங்கிய 11சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

by Admin / 04-01-2022 12:53:53pm
 வேகத்தடையில் செல்லும் போது இறங்கிய 11சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் சாவடியை சேர்ந்த அப்துல் காதர் என்பவரது 11வயது மகன் முகமது அப்பாஸ், பண்ருட்டி அருகே உள்ள பக்கரிபாளையம் பகுதியில் இயங்கி வரும் அரபி மதரஸா என்ற பள்ளியில் ஆறாம் வகுப்பு அரபி படித்து வருகிறார்.

வழக்கம்போல் இன்று காலையில் கடலூரிலிருந்து பண்ருட்டி நோக்கி வந்த அரசு பேருந்து முகமது அப்பாஸ் வந்துள்ளார்.

அப்பொழுது பக்கிரிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் ஓட்டுநர் நிறுத்தாமல்  சென்றதால் அருகே உள்ள ரயில்வே கேட் வேகத்தடையில் பேருந்து செல்லும் பொழுது மாணவர் முகமது அப்பாஸ் இறங்க முயற்சித்தபோது எதிர்பாராமல் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
 
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த அப்பகுதி மக்கள் திடீரென்று பண்ருட்டி, கடலூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பண்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லா மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இந்த பகுதியில் அரசு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளும் நிறுத்ததில் நிறுத்தமால் செல்வதாவும் இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர் உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


 

 

Tags :

Share via