தைரியம் இருந்தால் தமிழகத்தில் பாஜக போட்டியிடட்டும்: முனுசாமி

by Staff / 01-03-2024 01:48:35pm
தைரியம் இருந்தால் தமிழகத்தில்  பாஜக போட்டியிடட்டும்: முனுசாமி

தமிழ்நாட்டு மக்கள் அரசியல் ஞானம் உள்ளவர்கள் என முன்னாள் அமைச்சர் கே. பி. முனுசாமி தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு தைரியம் இருந்தால் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் தமிழகத்தில் போட்டியிடட்டும். தமிழக மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள். தமிழக மக்கள் விவரமானவர்கள், அதனால் தான் 50 வருடமாக தேசிய கட்சிகள் தமிழகத்திற்குள் வரவில்லை என்று கூறிய அவர், பாஜக அதை விரைவில் உணரும் என்றார்.

 

Tags :

Share via